்‌ : 71S

NS ந்த

Gey} =

ழ்‌ நாடு ;

| | ] i

ரப இத்து ர்‌ டதத er ட்‌

பன்ரா தடா ee ரா,

i Cans (eo =. NE கல்லாம்‌ யாவ ப்‌ (அன்த

பதன்‌ ef

eT ஆதா. ததத ch

ஸ்‌

nt iat 2 + oe a | த்‌ —_ eA பரி.

vel

ணி ab +h &

அறிவியல்‌ களஞ்சியம்‌

Digitized by the Internet Archive in 2022 with funding from University of Toronto Scarborough Library

https://archive.org/details/scienceencyloped18unse

அறிவியல்‌ களஞ்சியம்‌

தொகுதி பதினெட்டு (யங்‌ - விதை)

மிறர்‌ பல்கலைக்கழக துஞ்சாளுர்‌ - GIS 010.

ISBN : 978-81-7090-387-1

தமிழ்‌ வளர்ச்சித்துறை வழங்கிய நல்கை நிதியிலிருந்து இந்நூல்‌ வெளியிடப்படுகி, து.

தமிழ்ப்‌ பல்கலைக்கழக வெளியீடு எண்‌ : 344

திருவள்ளுவராண்டு 2040, ஐப்பசி - நவம்பர்‌ - 2009

நூல்‌ முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு) மொழி பொருள்‌ பதிப்பு

பக்கம்‌

தாள்‌

அளவு நூற்கட்டுமானம்‌ விலை

படிகள்‌

அச்சு

: அறிவியல்‌ களஞ்சியம்‌ தொகுதி -18

: முனைவர்‌ நே. ஜோசப்‌

> தமிழ்‌

> களஞ்சியம்‌

: முதற்பதிப்பு 2009

> 990 +20

> டி.என்‌.பி.எல்‌. மேப்‌ லித்தோ 16 கிலோ : 1/4 டெம்மி

முழு காலிகோ

: உரூ . 800.00

: 1200

தமிழ்ப்‌ பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம்‌

தஞ்சாவூர்‌

அறிவியல்‌ களஞ்சியம்‌

வேந்தர்‌ மேதகு சுர்ஜித்சிங்‌ பர்னாலா ஆளுநர்‌ , தமிழ்நாடு

புரவலர்‌ மாண்புமிகு டாகடர்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி முதலமைச்சர்‌ , தமிழ்நாடு

இணைவேந்தர்‌ மாண்புமிகு முனைவர்‌ ௧. பொன்முடி உயர்கல்வி அமைச்சர்‌ , தமிழ்நாடு

துணைவேந்தர்‌ முனைவர்‌ ம. இராசேத்திரன்‌

முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொ) முனைவர்‌ நே. ஜோசப்‌

பதிப்புக்குழு

முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)

ஆய்வு உதவியாளர்கள்‌

ஓவியர்‌

முனைவர்‌ நே. ஜோசப்‌ முனைவர்‌ த. தெய்வீகன்‌ வேதியியல்‌

முனைவர்‌ ஆர. கமலதியாகராசன்‌ மொழிச்செப்பம்‌

முனைவர்‌ பெ. துரைசாமி இயற்பியல்‌, கணிதம்‌

முனைவர்‌ திருமதி இரா. இந்து எந்திர, மின்‌ மற்றும்‌ மின்னணுப்‌ பொறியியல்‌

திருமதி க. சித்திராதேவி பொதுப்‌ பொறியியல்‌, நிலவியல்‌

முனை வா்‌ இரெ. அன்பரசன்‌

நன்றியுரை

அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினெட்டாம்‌ தொகுதி வெளியிடுவதற்கு எல்லா வகையிலும்‌ ஆக்கமும்‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணைபுரிந்த மாண்பமை துணைவேந்தர்‌ முனைவர்‌ ம. இராசேந்திரன்‌ அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. |

இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து ஊக்கமளித்த பல்கலைக்கழகப்‌ பதிவாளர்‌ (பொறுப்பு) முனைவர்‌ ஆ. கார்த்திகேயன்‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்கொள்கிறேன்‌.

இத்தொகுதி ஆக்கத்தின்போது கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌ அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைக்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு .வி. தியாகராசன்‌ திரு. நா. காமராசு ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி.

இத்தொகுதி நன்முறையில்‌ வெளிவர ஈடுபாட்டுடன்‌ துணைநின்ற பல்கலைக்கழகப்‌ பதிப்புத்துறை இயக்குநர்‌(பொறுப்பு) திரு. வை. கண்ணபுரக்கண்ணன்‌ அவர்கட்கும்‌ பதிப்புத்துறையினருக்கும்‌ என்‌ நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறேன்‌.

முனைவர்‌ நே. ஜோசப்‌ இடம்‌ தஞ்சாவூர்‌ முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌(பொறுப்பு) நாள்‌ இரா அடு களஞ்சியமையம்‌

கோரி யாரடி விட்டா

Encyclopaedias The International Wild Life Encyclopaedia

Marshall Cavendish Corporation

கலைக்‌ களஞ்சியம்‌ New York

தமிழ்‌ வளர்ச்சிக்கழக வெளியீடு

சென்னை The New Book of Knowledge Grolier Inc.

Encyclopaedia Britannica London

Encyclopaedia Britannica Inc.

London The Hamlyn Children’s Animal World

Encyclopaedia in Colour The Hamlyn Publishing Group Ltd. London

Encyclopaedia Americana Americana Corporation Danbury, Connecticut 06816

The New Caxton Encyclopaedia The Caxton Publishing Company Ltd. London

கலைச்‌ சொற்கள்‌

Scientific and Technical Terms List

Depariment of Scientific Tamil and . Tamil Development

Tamil University, Thanjavur 613001

The Collier's Encyclopaedia MacDonald Rain Tree Inc.

Purnell Reference Books Division Orbis Publishing Limited

London பொறியியல்‌ மருத்துவக்‌ கலைச்சொற்‌ பட்டியல்கள்‌

அறிவியல்‌ தமிழ்‌ மற்றும்‌ தமிழ்‌ வளர்ச்சித்துறை

Grzimek’s Animal Life Encyclopaedia தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ 613 005

Van Nostrand Reinhold Company New York

ஜீ.ஆர்‌.தாமோதரன்‌ கலைச்சொல்‌ அகராதி 1,2,3 கலைக்கதிர்‌ வெளியீடு கோயம்புத்தூர்‌ 641 037

The New Book of Popular Science Grolier Inc. Danbury, Connecticut 06816

SUGDSpImy ஞூ

இயற்பியல்‌

முனைவர்‌ வி. இராதாகிருஷ்ணன்‌ இயற்பியல்‌ பேராசிரியர்‌

மன்னர்‌ சரபோதி அரசுக்‌ கலைக்கல்லூரி தஞ்சாவூர்‌ 613 005

கணிதவியல்‌ புள்ளியியல்‌ வானியல்‌

மேஜர்‌ எம்‌. அரவாண்டி 27 புதுக்‌ குடியிருப்பு மன்னார்புரம்‌ திருச்சிராப்பள்ளி 620 020

கிரு ஏ.வி. சீனிவாசன்‌ முதல்வர்‌

ஈ.வெ.ரா.அரசுக்‌ கலைக்கல்லூரி திருவெறும்பூர்‌ திருச்சிராப்பள்ளி 620 013.

கால்நடை. மருத்துவம்‌

டாக்டர்‌ வே. புருஷோத்தமன்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

நுண்ணுயிரியல்‌ துறை

கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி மையம்‌ நாமக்கல்‌ 637 002

தாவரவியல்‌

முனைவர்‌ கோ, அர்ச்சுணன்‌

146, நிஜாம்‌ குடியிருப்பு புதுக்கோட்டை 622 001

திரு நா. வெங்கடேசன்‌ தாவரவியல்‌ பேராசிரியர்‌ ம.இரா.அரசுக்‌ கலைக்கல்லூரி மன்னார்குடி 614 001

நிலவியல்‌

முனைவர்‌ ஞா. விக்டர்‌ இராசமாணிக்கம்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

நில அறிவியல்துறை

தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌

தஞ்சாவூர்‌ 613 005

பொறியடியால்‌

திரு கே.ஆர்‌. கோவிந்தன்‌ உதவிப்பேராசிரியர்‌ எந்திரவியல்‌ துறை

அரசினர்‌ பொறியியல்‌ கல்லூரி சேலம்‌ 636 011

மருத்தூவம்‌

டாக்டர்‌ ஏசுவடியான்‌

முதன்மை மருத்துவர்‌

செவன்த்‌ டே அட்வன்டிஸ்ட்‌ மருத்துவமனை தஞ்சாவூர்‌ 613 005

டாக்டர்‌ கே. குணசுந்தரி துணை முதன்மை மருத்துவர்‌ பெல்‌ மருத்துவமனை

திருச்சி 620 014

வேதிப்‌ பொறியியல்‌

முனைவர்‌ எஸ்‌. குலசேகரன்‌ ஆராய்ச்சியாளர்‌

மையத்‌ தோல்‌ ஆராய்ச்சிக்‌ கழகம்‌ அடையாறு

சென்னை 600 020

முனைவர்‌ af. சுப்பிரமணியன்‌ துறைத்தலைவர்‌

நெசவுப்‌ பொறியியல்‌ துறை அழகப்பா தொழில்நுட்பக்‌ கல்லூரி அண்ணா பல்கலைக்கழகம்‌ சென்னை 600 025

முனைவர்‌ கதிர்‌. விசுவலிங்கம்‌ இணைப்‌ பேராசிரியர்‌

வேதிப்‌ பொறியியல்‌ துறை அண்ணா பல்கலைக்கழகம்‌ சென்னை 600 025

வேதியியல்‌

திரு இரா. இலக்குமணன்‌ வேதியியல்‌ பேராசிரியர்‌

மன்னர்‌ சரபோஜி அரசுக்‌ கலைக்கல்லூரி தஞ்சாவூர்‌ 613005

முனைவர்‌ இரா. தனஞ்செயன்‌

பேராசிரியர்‌, மருந்தியல்‌ துறை

டாக்டர்‌ ஏ.எல்‌.எம்‌.அடிப்படை மருத்துவ அறிவியல்‌ முதுகலைப்‌ படிப்பு மையம்‌

தரமணி

சென்னை 600 113

திரு GSI. துளசிதாஸ்‌ வேதியியல்‌ பேராசிரியர்‌ 29 பி முத்துசாமி நகர்‌ சிவகங்கை 623 560

முனைவர்‌ (திருமதி) ஆர்‌. சரஸ்வதி இணைப்பேராசிரியர்‌, வேதியியல்‌ துறை குந்தவை நாச்சியார்‌ அரசுக்‌ கல்லூரி தஞ்சாவூர்‌ 613 007

கட்டுரையாளர்கள்‌

இயற்பியல்‌

திரு கே. என்‌. இராமச்சந்திரன்‌

2024, அய்யன்குளம்‌ கிழக்குக்‌ கரை,

சகாநாயகன்‌ தெரு, தஞ்சாவூர்‌ - 613 009.

திரு எம்‌. எஸ்‌. கோவிந்த்சாமி எண்‌. 1, அண்ணா தெரு, மின்வாரியக்‌ குடியிருப்பு, நாஞ்சிக்கோட்டைச்‌ சாலை, தஞ்சாவூர்‌ - 613 006.

திரு ச. சம்பத்‌ இயற்பியல்‌ பேராசிரியர்‌,

மண்டலப்‌ பொறியியல்‌ கல்லூரி,

கிருச்சிராப்பள்ளி - 620 015.

திருமதி ௧. சித்திராதேவி களஞ்சிய மையம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு டி. சீனிவாசன்‌ கிருச்சிராப்பள்ளி - 620 013.

முனைவர்‌ பெ. துரைசாமி தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 6.15005»

திரு கொ. சு. மகாதேவன்‌ சென்னை - 600 001.

கடலியல்‌

திரு ந. அதியமான்‌ துறைத்‌ தலைவர்‌, நீரகழாய்வு மையம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திருமதி வெ. கிரிஜாபாய்‌ பெரியார்‌ கலைக்‌ கல்லூரி, கடலூர்‌ - 607 001.

முனைவர்‌ மு. தங்கராஜ ஆராய்ச்சியாளர்‌,

கடல்வாழ்‌ உயிரின ஆராய்ச்சி நிலையம்‌, இந்திய விலங்கியல்‌ ஆய்வு நிலையம்‌, சாந்தோம்‌, சென்னை - 600 004.

முனைவர்‌ ச. பரிமளா துறைத்‌ தலைவர்‌, தொல்லறிவியல்‌ துறை, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு கி. வெங்கடராமானுஜம்‌ மீன்வளக்‌ கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

தூத்துக்குடி - 628 008.

திரு கு. ஜெகதீசன்‌ பேராசிரியர்‌, . மீன்வளக்‌ கல்லூரி, தூத்துக்குடி - 628 008.

கணிதம்‌

திரு சி. அசோகன்‌

கணிதவியல்‌ பேராசிரியர்‌,

பெரியார்‌ ஈ.வெ. ரா. அரசுக்கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 020.

திரு எம்‌. அரவாண்டி 27, புதுக்குடியிருப்பு, மன்னார்புரம்‌,

கிருச்சிராப்பள்ளி - 620 020.

திருமதி ௧. இந்திராணி கணிதத்துறை உதவிப்‌ பேராசிரியர்‌, நிர்மலா கல்லூரி,

கோயம்புத்தூர்‌ - 641 003.

திரு இ. கஸ்பர்ராஜ்‌ கோயம்புத்தூர்‌ - 641 003.

திரு நா. காமராஜ்‌ உ.அ.அ.தே.மேல்‌ நிலைப்‌ பள்ளி, அம்மாப்பேட்டை,

தஞ்சாவூர்‌ - 613500 7.

திரு பி.எஸ்‌. கிருஷ்ணன்‌ சென்னை - 600 007.

திரு பொ. ஞானசுந்தரம்‌

கணிதவியல்‌ பேராசிரியர்‌,

பெரியார்‌ ஈ.வெ.ரா. அரசுக்கலைக்‌ கல்லூரி,

திருச்சி - 620 020.

திரு வை. தியாகராசன்‌ வலிவளம்‌ தேசிகர்‌ பாலிடெக்னிக்‌,

நாகப்பட்டினம்‌.

திருமதி பங்கஜம்‌ கணேசன்‌ 1, யாகப்பா நகர்‌,

தஞ்சாவூர்‌ - 613 005.

திரு பெ. வடிவேல்‌

கணிதவியல்‌ பேராசிரியர்‌,

மன்னர்‌ சரபோஜி அரசுக்‌ கலைக்கல்லூரி, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு ஜெயராம்‌ ஆறுமுகம்‌ முதல்வர்‌,

அரசுக்‌ கலைக்‌ கல்லூரி, திருவெறும்பூர்‌, திருச்சிராப்பள்ளி - 620 020.

திரு என்‌. ஸ்தானுமூர்த்தி சென்னைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, சென்னை - 600 005.

திரு அ. ஜான்‌ வில்லியம்‌ பெலிக்ஸ்‌ கிருத்துவ மருத்துவக்‌ கல்லூரி, வேலூர்‌ - 632 004.

கால்நடையியல்‌ டாக்டர்‌ ஆர்‌. கோவிந்தராஜ்‌

72, பாண்டியன்‌ வீதி,

சென்னிமலை, ஈரோடு - 638 001.

டாக்டர்‌ பி.பி. தங்கவேலு

இணைப்‌ பேராசிரியர்‌, கால்நடையியல்‌, ஆர்‌.எ.ஜ. கீழ்ப்பாக்கம்‌ தோட்ட காலனி, பொள்ளாச்சி - 642 001.

திரு அ. நடராசன்‌

உதவிப்‌ பேராசிரியர்‌,

மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம்‌, பொட்டனேரி (வழி) மேச்சேரி, சேலம்‌ - 636 002.

திரு இரா. வசந்தகுமார்‌ உதவி இயக்குநர்‌,

கால்நடை பராமரிப்புக்‌ துறை, சென்னை - 600 006.

தாவரவியல்‌ திரு ௨. அஞ்சனம்‌ அழகிய பிள்ளை

இணைப்‌ பேராசிரியர்‌, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌,

அருப்புக்‌ கோட்டை - 626 107,

திரு கோ. அர்ச்சுணன்‌

146, நிஜாம்‌ குடியிருப்பு, புதுக்கோட்டை - 622 001.

திரு ௧. இராசேந்திரன்‌

இணைப்‌ பேராசிரியர்‌,

ஆராய்ச்சி நெறியகம்‌ (வேளாண்மை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌ கோவை - 641 003.

திரு என்‌. ஆர்‌. இராசேந்திரன்‌ சென்னை - 600 001.

திரு த. இராபின்சன்‌ தாமஸ்‌ வேளாண்மையியல்‌ பேராசிரியர்‌, ஆபிரகாம்‌ பண்டிதர்‌ சாலை, தஞ்சாவூர்‌ - 613 001.

திரு வே. கருணாநிதி

தாவரவியல்‌ பேராசிரியர்‌, அன்பநாதபுரம்‌ வகையறா அறத்துறை கல்லூரி,

மன்னம்பந்தல்‌,

மயிலாடுதுறை - 609 305.

திரு இரா. கேசவன்‌ வேளாண்‌ உதவி இயக்குநர்‌, அண்ணாமலை பண்ணை, வயலோகம்‌ அஞ்சல்‌, புதுக்கோட்டை - 622 104.

திரு கோ. கோபாலன்‌ துணைப்‌ பேராசிரியர்‌, தாவரவியல்‌ துறை, மதுரைக்‌ கல்லூரி, மதுரை - 625 011.

திரு ந. கோபால்சாமி

இணைப்‌ பேராசிரியர்‌,

வேளாண்மை உழவியல்‌ துறை, வானிலை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோவை - 614 003.

திரு வி. சங்கரன்‌ ' தாவரவியல்‌ பேராசிரியர்‌,

நல்லமுத்துக்‌ கவுண்டர்‌ மகாலிங்கம்‌ கல்லூரி,

பொள்ளாச்சி - 642 001.

திரு பி. சம்பத்‌ தாவரவியல்‌ பேராசிரியர்‌, அரசுக்‌ கலைக்கல்லூரி, சென்னை - 600 035.

திரு கா. சிவபிரகாசம்‌ பயிர்‌ நோயியல்‌ பேராசிரியர்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

திரு சி. செல்வராஜ்‌ தாவரவியல்‌ தேர்வு நிலை விரிவுரையாளர்‌, அரசினர்‌ கலைக்கல்லூரி,

அரியலூர்‌ - 621 713.

திரு கே. ஆர்‌. திருவேங்கடசாமி 8741 - அழகப்பா சாலை, புரசைவாக்கம்‌,

சென்னை - 600 084.

திரு கு. பத்மநாபன்‌ 5, திவ்ய பிரபந்த தெரு,

பாளையங்கோட்டை.

திரு கே. ஆர்‌. பாலசந்திர கணேசன்‌ மேனாள்‌ முதல்வர்‌,

அரசினர்‌ கலைக்‌ கல்லூரி, அரியலூர்‌ - 621 713.

2.

திரு ஜெ. மனோகரன்‌

பார்ம்‌ பிராடக்ட்ஸ்‌ பிரைவேட்‌ லிட்‌., மருத்துவக்‌ கல்லூரி சாலை, தஞ்சாவூர்‌ - 613 007.

திரு க. வணங்காமுடி இணைப்‌ பேராசிரியர்‌ (விதை நுட்பம்‌), வேளாண்மை ஆராய்ச்சி மையம்‌,

பவானி சாகர்‌ - 638 451.

திரு சா. விஸ்வநாதன்‌

விரிவுரையாளர்‌,

வனச்சார்பு அலுவலர்‌ பயிற்சிக்‌ கல்லூரி, ஆர்‌.எஸ்‌.புரம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 002.

திரு நா. வெங்கடேசன்‌

தாவரவியல்‌ பேராசிரியர்‌,

ம. இரா. அரசினர்‌ கலைக்கல்லூரி, மன்னார்குடி - 641 001. :

திரு ஆர்‌. லட்சுமணநாதன்‌ செங்கரடு, தேக்கம்பட்டி, ஓமலூர்‌ வட்டம்‌,

சேலம்‌ மாவட்டம்‌ - 641 118.

திரு மா. லெட்சுமணநாதன்‌

ஓமலூர்‌, சேலம்‌ - 641 118.

திரு தி. ்ரீகணேசன்‌ பேராசிரியர்‌ தாவரவியல்‌ துறை, மதுரைக்‌ கல்லூரி,

மதுரை - 625 011.

நிலவியல்‌

திரு மு. இராமச்சந்திரன்‌ சென்னை - 600 001.

திரு ' சந்திரசேகர்‌

களஞ்சிய மையம்‌ (அறிவியல்‌), தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌ தஞ்சாவூர்‌ - 613 005.

திருமதி ௧. சித்திரா தேவி களஞ்சிய மையம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613005.

முனைவர்‌ ஞா. விக்டர்‌ இராசமாணிக்கம்‌ மேனாள்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ துறைத்‌ தலைவரா,

நில அறிவியல்‌ துறை,

தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌,

கஞ்சாவூர்‌ - 613 005.

திரு வெ. ஸ்ரீதரன்‌ சென்னை - 600 001.

பொறியியல்‌

திரு வயி. அண்ணாமலை

உதவிப்‌ பேராசிரியர்‌,

மூகாம்பிகை பொறியியல்‌ கல்லூரி, கீரனூர்‌ - 622502.

xin

திரு கி. அருண்குமார்‌ எந்திரவியல்‌ துறை,

அரசு பொறியியல்‌ கல்லூரி, சேலம்‌ - 636 011.

திருமதி வா. அனுசுயா சென்னை - 600 001.

முனைவர்‌ இரா. இந்து களஞ்சிய மையம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு சு. மேகவண்ணன்‌ சென்னை - 600 001.

திரு கே. ஆர்‌. கோவிந்தன்‌

முதல்வா,

ஜெயராம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரி,

துறையூர்‌, திருச்சிராப்பள்ளி - 621 014.

திரு வி. சண்முகசுந்தரம்‌ எந்திரவியல்‌ துறை,

தியாகராஜர்‌ பல்தொழில்நுட்பப்‌ பயிலகம்‌, சேலம்‌ - 636 005.

திருமதி இரா. சரசவாணி சென்னை - 600 001.

திரு உலோ. செந்தமிழ்க்‌ கோதை 1, சின்னசாமி சாஸ்திரி தெரு, சென்னை - 600 001.

திரு கு. நல்லதம்பி

துணைப்‌ பேராசிரியர்‌, அரசினர்‌ பொறியியற்‌ கல்லூரி, சேலம்‌ - 636 011.

திரு ௧. அர. பழனிச்சாமி அரசு பொறியியற்‌ கல்லூரி, சேலம்‌ - 636 011.

திரு ச. முத்து விஞ்ஞானி,

திட உந்து பொறிகள்‌ திட்டக்‌ குழுவகம்‌,

ஷார்‌ விண்வெளி மையம்‌, ஸ்ரீஹரிக்கோட்டா - 524 124.

மருத்துவம்‌

டாக்டர்‌ ரா. அமுதா 20, 3-ஆம்‌ தெரு, அபிராமபுரம்‌, சென்னை - 600 018.

டாக்டர்‌ ச. ஆதித்தன்‌ ஈ8, மருத்துவர்‌ குடியிருப்பு, ஜிப்மெர்‌,

பாண்டிச்சேரி = 605 001.

டாக்டர்‌ நா. கங்கா

. குழந்தை நல மருத்துவம்‌,

இராசா மிராசுதார்‌ மருத்துவமனை,

தஞ்சாவூர்‌ - 613001.

டாக்டர்‌ அ. கதிரேசன்‌ 24, கோவில்‌ தெரு, அழகப்பா நகர்‌, சென்னை - 600 010.

டாக்டர்‌ ஜி, கண்ணன்‌ சி.வி சி.டி. இல்லம்‌, கானாடு காத்தான்‌ - 623 103.

டாக்டர்‌ டி.எம்‌. காமேஸ்வரன்‌ சென்னை - 600 020.

டாக்டர்‌ மு.ப. கிருஷ்ணன்‌ 637, 27-ம்‌ தெரு, கொரட்டூ, சென்னை - 606 080,

டாக்டர்‌ இரெ. சதாசிவம்‌

உயிர்‌ வேதியியல்‌ பேராசிரியர்‌, 377-ஏ, தடாகம்‌ சாலை, கோயம்புத்தூர்‌ - 641 040.

டாக்டர்‌ சாரதா கதிரேசன்‌ 24, கோவில்‌ செரு, அழகப்பா நகர்‌, சென்னை - 600 002.

டாக்டர்‌ கு. சிவஞானம்‌ 54, காந்தி நகர்‌, திண்டிவனம்‌ - 604 002.

டாக்டர்‌ சுவயம்‌ ஜோதி

7, 3-ஆம்‌ வாய்க்கால்‌ குறுக்குத்தெரு,

காந்தி நகர்‌, சென்னை - 600 020.

டாக்டர்‌ எம்‌. தனபாலன்‌

இ/43, ஜிப்மெர்‌ குடியிருப்பு, பாண்டிச்சேரி - 605 006.

டாக்டர்‌ & நரேந்திரன்‌ 623, கீழவீதி, தஞ்சாவூர்‌ - 613 001.

டாக்டர்‌ டி. எம்‌. பரமேஸ்வரன்‌ சி.261, திருநகர்‌, மதுரை - 625 011.

டாக்டர்‌ மு.கி. பழனியப்பன்‌ 635, 27- ஆம்‌ தெரு, கொரட்டூர்‌,

சென்னை - 600 080.

டாக்டர்‌ கலவை மு. முபாரக்‌ அலி 26, காந்தி சாலை, செய்யாறு - 604 407.

டாக்டர்‌ சு. ராஜலெட்சுமி

தமிழ்நாடு மருத்துவக்‌ கல்வித்துறை,

27, பாகிரதி அம்மாள்‌ தெரு, தியாகராய நகர்‌, சென்னை - 600 012.

டாக்டர்‌ மா. ஜெ. ஃபிரடெரிக்‌ ஜோசப்‌

பொன்ன்கம்‌, பாம்பாட்டித்‌ தெரு, கஞ்சாவூர்‌ - 615 GOL

இரு கோணி, இராமசுவாமி

துணைப்‌ பேராசிரியர்‌, விலங்கியல்‌ துறை, ௮.வ.௮. கல்லூரி, மன்னம்பந்தல்‌, மயிலாடுதுறை - 609 305.

திரு கோ. இலட்சுமணன்‌ விலங்கியல்‌ பேராசிரியர்‌, ஆதித்தனார்‌ கல்லூரி, திருச்செந்தூர்‌.- 628 216. ,

திரு எம்‌. கல்யாணசுந்தரம்‌

விலங்கியல்‌ பேராசிரியர்‌,

மன்னர்‌ சரபோஜி அரசுக்‌ கலைக்கல்லூரி, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு வே. கருப்பண்ணன்‌ சென்னை - 600 080.

முனைவர்‌ அர. கமலதியாகராசன்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திருமதி இரா. சகுந்தலா துணைப்‌ பேராசிரியர்‌, விலங்கியல்‌ துறை,

அரசினர்‌ மகளிர்‌ கலைக்‌ கல்லூரி, புதுக்கோட்டை - 622001.

திரு கு. சம்பத்‌ விலங்கியல்‌ துறை பேராசிரியர்‌, வ.உ.சி. கல்லூரி,

தூத்துக்குடி - 620 008.

திரு ஏ. சன்யாசி நாதன்‌ விலங்கியல்‌ பேராசிரியர்‌, அரசுக்‌ கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி - 635 001,

திரு பா. சீதாராமன்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ துறைத்தலைவர்‌, விலங்கியல்‌ துறை,

திரு.கொளஞ்சியப்பர்‌ அரசுக்கலைக்கல்லூரி,

விருத்தாசலம்‌ - 606 001.

திரு கே. சுப்ரமணியன்‌

நூலகர்‌,

மன்னர்‌ சரபோஜி அரசுக்கலைக்கல்லூரி, தஞ்சாவூர்‌ - 613 005.

திருமதி சு. செல்லம்மாள்‌ முதுநிலை விரிவுரையாளர்‌, விலங்கியல்‌ துறை,

அரசினர்‌ மகளிர்‌ கலைக்கல்லூரி, புதுக்கோட்டை - 622001.

முனைவர்‌ வீ. தமிழரசன்‌ விலங்கியல்‌ துறை, மன்னர்‌ சரபோஜி அரசுக்‌ கலைக்கல்லூரி,

தஞ்சாவூர்‌ - 613 005.

திரு இரா. பக்தவச்சலம்‌ விலங்கிபல்‌ துறை, துணைப்‌ பேராசிரியர்‌, அரசினர்‌ கலைக்கல்லூரி, அரியலூர்‌ - 621 713.

x

திரு மு. மகாலிங்கம்‌

விலங்கியல்‌ துணைப்‌ பேரா

அரசினர்‌ கலைக்கல்லூரி,

உதகமண்டலம்‌ - 643 002.

திரு செ. மரியசூசைநாதன்‌ முதல்நிலை நூலகர்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு தி.சு. முருகன்‌ விலங்கியல்‌ பேராசிரியர்‌, ம.தி.தா. இந்துக்கல்லூரி, திருநெல்வேலி - 627 010.

திரு ர. யூசுப்‌ ஷெரீப்‌ விலங்கியல்‌ துறை, அப்துல்‌ ஹக்கீம்‌ கல்லூரி, மேல்விசாரம்‌ - 632 504.

திரு க. ரத்னம்‌ பேராசிரியர்‌,

19பி, திருச்சி சாலை, குலூர்‌ - 641 402.

முனைவர்‌ பா. ராம்‌ மனோகர்‌ அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்‌ பள்‌எ'

புதுக்கோட்டை - 614 602.

திரு வி. கே. வெங்கடரமணி மீன்வளக்‌ கல்லூரி, தூத்துக்குடி - 628 001.

we) pe (ணை சா os i - 8 ௬35 Sore த்‌ ities ௬94 Tar

யல்‌ துறை,

மன்னர்‌ சரபோஜி அரசுக்‌ கலைக்‌ கல்லூரி,

தஞ்சாவூர்‌ - 613 005.

திரு ஷேக்‌ தாவூத்‌ விலங்கியல்‌ பேராசிரியர்‌, அரசுக்கலைக்கல்லூரி, கோயம்புத்தூர்‌ - 614 018.

திருமதி ஜெயக்கொடி கெளதமன்‌ 7/255, H.1.G. மருதம்‌,

புதிய வீட்டுவசதி வாரியம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

வேதியியல்‌

திரு நா. அய்யாசாமி

வேதியியல்‌ துணைப்‌ பேராசிரியர்‌, அரசினர்‌ பொறியியற்‌ கல்லூரி, கோயம்புத்தூர்‌ - 641 013.

திரு வி. அ. இளவழகன்‌ வேதியியல்‌ பேராசிரியர்‌,

அ.வீ.வா. நினைவு திருபுட்பம்‌ கல்லூரி,

பூண்டி - 623 001.

திரு கே.ஆர்‌. கங்காதரன்‌

வேதியியல்‌ முதுநிலை விரிவுரையாளர்‌ சேதுபதி அரசுக்‌ கலைக்‌ கல்லூரி, இராமநாதபுரம்‌ - 623 502.

திரு தி. கோவிந்தராஜன்‌ 3, திருவள்ளுவர்‌ சாலை, கான்வென்ட்‌ ரோடு, சேலம்‌ - 626 016. -

திருமதி ஏ. சியாமள!

5, இந்திர ben

வயலூர்‌ ci திருச்சிராப்பள்ளி - 620 20°.

திரு ௧. சேது

வேதியியல்‌ பேராசிரியர்‌, கார்த்திக்‌ இல்லம்‌,

மஜீத்‌ சாலை,

சிவகங்கை - 623561.

திரு பொ. சொக்கலிங்கம்‌

வேதியியல்‌ முதுநிலை விரிவுரையாளர்‌, 161- திரிபுரசுந்தரி நகர்‌,

தஞ்சாவூர்‌ - 613 007.

முனைவர்‌ த. தெய்வீகன்‌ களஞ்சிய மையம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌ - 613 005.

திரு இரா. விஸ்வநாதன்‌ வேதியியல்‌ விரிவுரையாளர்‌, 52, என்‌. ஜி.ஓ. காலனி, நாகமலை,

மதுரை - 625 019.

திரு பி.ஈ.எம்‌. லியாகத்‌ அலிகான்‌ வேதியியல்‌ துணைப்‌ பேராசிரியர்‌, சேதுபதி அரசுக்‌ கல்லூரி, இராமதாதபுரம்‌ - 623 502.

டடம அல்லல்‌ ஷ்னா பகல்‌ வருட Rie? LITT ELUTE 1B BY hd மடு air? A ae a ~ as 240) Puan ப்‌

கரணி பா்‌ sane

இதி) த்‌

விண்‌

| கலம்‌ ALLA விலே cooatygag duet | I | க்‌ -19%

wor “SOG ELS பட்டன்‌

| ள்‌. satin கனம | ர்‌... Sse ATES ‘CRdwaiamaens (yaa, =

1 தன்‌ 97 ee Sz

43

பல்கு வை

ர்‌. ணை ட்ட ee அரில்‌ புகு ம்பிய டா சது வேரும்‌.

NETS ED கவ படைப்‌

. ai sc My த. 4 a = aa

அறிவியல களஞ்சியம்‌

தொகுதி பதினெட்டு

யங்‌ குணகம்‌

ஒரு பொருளின்‌ மேல்‌ வெளி விசைகள்‌ செலுத்தப்படும்‌ போது அவற்றில்‌ உருக்குலைவு ஏற்படுகிறது. அந்த விசைகளை நீக்கினால்‌ அந்த உருக்குலைவு மறைந்து

“பொருள்‌ தனது இயல்பான வடிவத்தை மீண்டும்‌ பெற்றுவிடும்‌. இதற்கு மீள்‌ திறன்‌ (elasticity) என்று பெயர்‌. ஒரு பொருளின்‌ மேல்‌ வெவ்வேறு வகையான விசைகள்‌ செயல்படும்போது அவற்றின்‌ நீளம்‌, வடிவம்‌, பருமன்‌ ஆகியவற்றில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌. இதற்குத்‌ திரிபு (strain) என்று பெயர்‌.

ஒரு பொருளின்‌ மீது வெளி விசை செயல்படும்போது அதிலுள்ள துகள்கள்‌, இடப்பெயர்ச்சி அடையும்‌. பொருளின்‌ மீள்தன்மை காரணமாக அத்துகள்கள்‌ திரும்பத்‌ தமது நிலைகளுக்கு மீண்டு வர முயற்சி செய்யும்‌. இதனால்‌ பொருளுக்குள்‌ ஒரு மீட்டு வரும்‌ விசை (restoring force) உருவாகிறது. அது பொருளின்மேல்‌ செலுத்தப்பட்ட வெளி விசைக்குச்‌ சமமாகவும்‌ எதிர்த்திசையிலும்‌ இருக்கும்‌. அலகு பரப்பில்‌ செயல்படும்‌ இந்த மீட்டு வரும்‌ விசை, தகைவு (stress) எனப்படும்‌. வெளி விசை செயல்படுவதால்‌ ஒரு பொருளின்‌ நீளத்தில்‌ ஏற்படும்‌ மாற்றத்திற்கும்‌ அதன்‌ இயல்பான நீளத்திற்கும்‌ இடையிலான தகவு நீளத்‌ திரிபு (longitudinal strain) எனப்படுகிறது.

ஹூக்‌ என்பார்‌ வெளியிட்ட விதியின்படி

. மீட்சி எல்லைக்குட்பட்ட நிலையில்‌ தகைவு, திரிபுக்கு

நேர்‌ விகிதத்தில்‌ இருக்கும்‌. தகைவுக்கும்‌ திரிபுக்கும்‌ இடையிலான தகவு ஒரு மாறிலி. அதற்குக்‌ குணகம்‌ (modulus) என்று பெயர்‌. ஒரு பொருளில்‌ செலுத்தப்படும்‌ நீளவாட்டுத்‌ தகைவுக்கும்‌ நீள வாட்டுத்‌ திரிபுக்கும்‌ இடையிலான தகைவு யங்‌ குணகம்‌ எனப்படுகிறது.

L நீளமுள்ள கம்பியின்‌ நீள வாக்கில்‌ F என்ற விசையைச்‌ செலுத்தினால்‌ அதன்‌ நீளத்தில்‌ | என்ற அதிகரிப்பு ஏற்படுவதாகக்‌ கொள்வோம்‌. அப்போது VL என்பது கம்பியின்‌ நீளத்‌ திரிபு ஆகும்‌. அதனுள்‌ செயல்படும்‌ 1, மீட்டு வரும்‌ தகைவு - F/A. இதில்‌ A என்பது கம்பியின்‌ குறுக்குவெட்டுப்‌ பரப்பு. எனவே, கம்பிப்‌ பொருளின்‌ யங்குணகம்‌ = '/,/ '/ = FL/AL. சியர்ளின்‌ கருவி மூலம்‌ இந்தச்‌ சமன்பாட்டைப்‌ பயன்படுத்திப்‌ [பொருள்களின்‌ யங்‌ குணகத்தைக்‌ கணக்கிடலாம்‌.

கே.என்‌.இராமச்சந்திரன்‌ துணைநூல்‌. Brijlal and Subrahmanyam, Prop-

erties of Matter, Eurasia Publishing House, New Delhi. 1982.

2 யாகி-உதா உணர்‌ சட்டம்‌ _யாகி-உதா உணீர்‌ சட்டம்‌

தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அனுப்பப்படும்‌ நுண்‌ அலைகள்‌ நிலையத்தின்‌ பரப்பி உணர்‌ சட்டத்தின்‌ மூலம்‌ பரப்பப்படுகின்றன. இவ்வாறு பரப்பப்பட்ட அலைகள்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டியுடன்‌ இணைக்கப்பட்டுள்ள உணர்‌ சட்டத்தின்‌ மூலம்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டியை அடைகிறது. இந்த

வாங்கி உணர்‌ சட்டம்‌ பல வகைப்படும்‌. அதில்‌

ஒன்றுதான்‌ யாகி-உதா உணர்‌ சட்டம்‌ (Yagi-Uda antenna) .

ஆகும்‌. இது படத்தில்‌ காட்டியபடி அமைப்பை

பிரதிபலிப்பான | DET

|

221. ae

2

+

ரு »

=

இந்த யாகி-உதா உணர்‌ சட்டம்‌ 0.5 அலை தூர நீளத்துடன்‌ கூடிய இருமுனையி (1ற௦]௪). ஒன்றுடன்‌ ஒரு பிரதிபலிப்பானையும்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிப்படுத்திகளையும்‌ கொண்டுள்ளது. படத்தில்‌ காட்டியுள்ளபடி ஒன்றுக்கொன்று குறிப்பிட்டுள்ள அலைதூர இடைவெளிகளைக்‌ கொண்டுள்ளது. இதில்‌ வழிப்படுத்திகள்‌ விண்ணில்‌ வருகின்ற.ஒலி மற்றும்‌ ஒளி நுண்‌ அலைகளை வழிப்படுத்தி இருமுனையிக்கு அனுப்புகின்றன. இதிலிருந்து வெளிப்படுகின்ற நுண்‌ அலைகள்‌ பிரதிபலிப்பானால்‌ பிரதிபலிக்கப்பட்டு இரு முனையை அடைகின்றன. இவ்வாறு கிடைக்கின்ற நுண்‌ அலைகள்‌ பின்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டியை அடைந்து தேவையான மாற்றங்களுக்குப்‌ பின்‌ நமக்குத்‌ தேவையான செய்திப்‌ படங்களாகத்‌ தொலைக்காட்சித்‌

திரையில்‌ தெரிகிறது. இந்த சட்டத்தின்‌ வழிப்படுத்தி

களை மிகுதியாகச்‌ சேர்க்கச்‌ சேர்க்கக்‌ கிடைக்கின்ற நுண்‌ அலைகளின்‌ ஆற்றல்‌ மிகுதியாகும்‌. பொதுவாக, ஒரே ஒரு பிரதிபலிப்பான்‌ மட்டுமே பயன்படுத்தப்‌ படுகிறது. ஒன்றுக்குமேல்‌ பயன்படுத்துவதால்‌ குறிப்பிடத்தக்க இலாபம்‌ இதில்‌ கிடைப்பதில்லை.

௧.அர.பழனிச்சாமி

யாசும்‌ பிண்டாவும்‌

யாசு எனப்படுவது, பால்வினை நோய்‌ அன்று. இது இந்தியாவின்‌ அம்மை எனக்‌ கூறலாம்‌. இந்நோய்‌ டிரிப்டநிமா பெர்ட்டீன்‌ என்னும்‌ நுண்ணுயிரியால்‌ ஏற்படுகிறது. இந்நுண்ணுயிரி தோலையும்‌ எலும்பையும்‌ பாதிக்கிறது. இந்நோய்‌, நாகரீகம்‌ குறைந்து காணப்படும்‌ இடங்களில்‌ தென்படுகிறது. ஈரோடு, கோயம்புத்தூர்‌, ஊட்டி, ஹைதராபாத்‌, வங்காளம்‌, தாவனகிரி ஆகிய மாவட்டங்களில்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொதுவாக இளம்‌ பருவத்தினரை பாதிக்கும்‌ நோய்‌ ஆகும்‌. 14 வயது வரை உள்ளோரே இந்நோயால்‌ பெரிதும்‌ பாதிக்கப்படுகின்றனர்‌. இந்நோய்‌ ஒருவருக்‌ கொருவர்‌ தொட்டுக்கொள்வதால்‌ பரவுகிறது. சிறிய படைகளாகவோ கிரானுலோமாவாகவோ (3 கட்டங்கள்‌) இது உண்டாகிறது.

முதல்‌ கட்டம்‌. சிறு படைகள்‌ உருவாதல்‌.

. இரண்டாம்‌ கட்டம்‌. யாசுன்‌ கொப்பளங்கள்‌ தென்படும்‌. மூட்டுக்கு மூட்டு வலியும்‌ ஏற்படுகிறது. எலும்புகள்‌ வலி அதிகமாகவும்‌ வீங்கியும்‌ தென்படும்‌. கால்களும்‌ கைகளும்‌ வளைந்து காணப்படும்‌.

மூன்றாம்‌ கட்டம்‌. கொப்பளங்களுடன்‌ கூடிய காயங்கள்‌ தென்படும்‌. மூக்கின்‌ அடி பகுதியில்‌ வீக்கம்‌ ஏற்படலாம்‌. நோய்‌ நுண்ணுயிரி உட்புகுந்து மூன்று அல்லது ஆறு வாரங்களுக்குப்‌ பின்னர்தான்‌ நோயின்‌ அறிகுறிகள்‌ தென்படும்‌. இரண்டு அல்லது நான்கு வாரங்கள்‌ சென்ற பின்னரே இரண்டாம்‌ கட்ட நோய்‌ அறிகுறிகள்‌ தென்படும்‌. யாசும்‌ பிண்டாவும்‌, மேக நோயும்‌ ஒரே மாதிரி சிலபோது தோற்றமளிக்கும்‌.

மருத்துவம்‌. சுற்றுப்புறத்தைத்‌ தூய்மையாக வைத்திருத்தல்‌ அவசியம்‌. நோய்‌ நுண்ணுயிரிகளை அழித்தல்‌ மிக முக்கியமாகும்‌. 750 மி.கி. புரொகைங்‌ பென்சிலின்‌ அல்லது டெட்ராசைகளின்‌ 1-2 கிராமும்‌ தினமும்‌ 5 நாள்களுக்கு அளித்தால்‌ பலன்‌ தருகிறது.

பிண்டா. யாசுவில்‌ இருந்து பிண்டாவை வேறுபடுத்துவது சிறிது கடினமான செயல்‌. ஏனெனில்‌, இரண்டும்‌ ஒன்று போலவே தோற்றமளிக்கும்‌. யாசுவின்‌ நோய்‌ வேகம்‌ பிண்டாவின்‌ நோயின்‌ வேகத்தை விடக்‌ குறைவாகவே இருக்கும்‌.

பிண்டா கிழக்கு அமெரிக்காவிலும்‌, கரிபியன்‌ தீவுகளிலும்‌ மிகுதியாகக்‌ காணப்படுகிறது. இந்நோய்‌ யாசுவைப்‌ போன்றே தொற்றிக்‌ கொள்ளும்‌ தன்மை கொண்டது. குழந்தை மற்றும்‌ பிள்ளைப்‌ பருவத்தில்‌ இந்நோய்‌ ஏற்படுகிறது.

கருப்பு இனத்தவரிடம்‌ இந்நோய்‌ மிகையளவில்‌ தென்படுகிறது. இந்நோயுடன்‌ மேக நோய்‌ என்னும்‌ பால்வினை நோயும்‌ சேர்ந்து தோன்றலாம்‌. இந்நோயின்‌ காரணிடிரிபனீமா காராடியம்‌ ஆகும்‌.

தோலுக்கடியில்‌ கிரானுலோமா உண்டாகிறது. தோலின்‌ நிறம்‌ மாறி காணப்படுகிறது. சிலேட்டுமப்‌ படலம்‌ அவ்வளவாகப்‌ பாதிக்கப்படுவதில்லை. இறுதிக்‌ கட்டங்களில்‌ புறத்தோல்‌ பாதிக்கப்படுகிறது. நிணநீர்‌ சுரப்பிகள்‌ வீங்கி காணப்படுகின்றன. வாசர்மான்‌ பிரதிவினை (W.R) முதலில்‌ எதிர்மறையாகவும்‌ பின்னர்‌ நேர்மறையாகவும்‌ இருக்கும்‌.

முதல்‌ கட்டத்தில்‌ கருநீல நிறத்தில்‌ ஒரு தடித்த தழும்பு சுற்றுப்புறத்‌ தோலில்‌ இருந்து மாறி காணப்படுகிறது. இது சுற்றுப்புறத்‌ தோலுக்கும்‌ மெதுவாகப்‌ பரவிவிடுகிறது. ஆறு அல்லது பன்னிரெண்டு மாதங்கள்‌ சென்ற பின்னர்‌, பிண்டா நோய்‌ கைகள்‌, கால்கள்‌, உடம்புப்‌ பகுதி முதலியவற்றைப்‌ பாதிப்பது தென்படும்‌. பிண்டா நோயில்‌ வலி ஏற்படுவதில்லை. ஆனால்‌, அரிப்பை உண்டு பண்ணுகிறது. அதனால்‌ புண்‌ உண்டாகிறது. இதனால்‌ தோல்‌ நிறமியை இழந்து காணப்படுகிறது.

இந்நோய்‌ இரண்டு பக்கங்களையும்‌ சமமாகப்‌

யாழ்ப்‌ பறவை 3

பாதிக்கும்‌ தன்மை .கொண்டது. இந்தத்‌ தன்மையாலும்‌, இந்நோய்‌ அதிகமாக உண்டாகும்‌ நிறுத்தியும்தான்‌

மாவட்டங்களை நினைவில்‌

இந்நோயை அறுதியிட முடிகிறது.

நோய்‌ நுண்ணுயிரி நோயின்‌ முதல்‌ கட்டத்திலும்‌ இறுதிக்‌ கட்டத்திலும்‌ நன்கு காணப்படுகிறது. நோய்‌ முற்றிய நிலையில்‌ இருக்கும்போது பென்சிலின்‌ மருந்து பயனளிக்கிறது. ஆனால்‌, தோலின்‌ நிற மாற்றத்திற்கு ஏதும்‌ செய்ய

இயலாத நிலை உள்ளது.

இது பூஞ்சை நோயைச்‌ சில சமயங்களில்‌ ஒத்து இருக்கிறது. தோலை எடுத்து ஆய்வு செய்து பார்க்கையில்‌ பூஞ்சை நோய்‌ நுண்ணுயிரி தென்படுகிறதா அல்லது பிண்டாவை உண்டாக்கும்‌ நோய்‌ நுண்ணுயிரி தென்படுகிறதா என்று பார்த்தால்‌

நோயை அடையாளம்‌ காண ஏதுவாகும்‌. ரா. அமுதா . துணைநூல்‌. John Macleod, Davidson s

Principles and Practise of Medicine, Eleventh Edi- tion, ELBS, London, 1974.

யாழ்ப்‌ பறவை

இப்பறவையை ஆஸ்திரேலியாவின்‌ மயில்‌ எனக்‌ கூறலாம்‌. இப்பறவை மிகவும்‌ அழகாக இருக்கும்‌. இது மெனுரிடே (Menuridae) குடும்பத்தைச்‌. சேர்ந்தது. ஆண்‌ பறவைக்கு அழகான தோகை உண்டு. தோகையின்‌ ஓரங்களில்‌ வெளியில்‌ வளைந்து நீளமான இரண்டு வாலிறகுகள்‌ யாழின்‌ மருங்குப்‌ பிடிகளைப்‌ போலவும்‌ மற்றும்‌ பன்னிரண்டு மெல்லிய இறகுகள்‌ யாழின்‌ நரம்புகளைப்‌ போலவும்‌ அமைந்துள்ளன. இப்பறவை வான்கோழியைவிட உருவத்தில்‌ சற்றுச்‌ சிறியது. ஆனால்‌, நீண்ட தோகை, உடலைப்போல்‌ நான்கு அல்லது ஐந்து மடங்கு நீளமுடையது. நல்ல கரும்‌ ஆரஞ்சு நிறமுடைய இதன்‌ உடலில்‌ ஆங்காங்கே கருஞ்சிவப்பு நிறத்‌ திட்டுகள்‌

காணப்படும்‌

TT உயில்‌

727 SK

722222 = Lo aos TED AS

222 BESS DS

eS

SS 222 த்‌

Z கணி SS = si EEE

ஆஸ்திரேலியன்‌ யாழ்பறவை காணப்படும்‌ தோகை இறகுகளின்‌ நிறம்‌ சில மண்ணைக்‌ கிளறித்‌ தரையில்‌ வாழும்‌ இடங்களில்‌ பச்சையாகவும்‌, வேறு சில இடங்களில்‌ பூச்சிகளைத்‌ தின்பதற்கு ஏற்ப இதன்‌ விரல்களும்‌, லமாகவும்‌ காணப்படும்‌. பெண்‌ யாழ்ப்‌ பறவைக்கும்‌ நகங்களும்‌ தடித்து நீண்டு உறுதியாக உள்ளன. காகையுண்டு. ஆனால்‌, ஆணின்‌ தோகையைப்‌ போல கால்களும்‌ வலுவுள்ளனவாக அமைந்துள்ளன. புழு, அவ்வளவு அழகுடையதன்று. அதனால்‌ தோகையை பூச்சி, அட்டை, பூரான்‌, வண்டு, நத்தை போன்ற உயர்த்தவும்‌ முடியாது. சிறிய சிறகுகளைக்‌ கொண்ட உயிரினங்களையும்‌ யாழ்ப்‌ பறவைகள்‌ உணவாகக்‌ இப்பறவைகளால்‌ மிகைத்‌ தொலைவு பறக்க கொள்கின்றன. முடிவதில்லை. ஆகையால்‌, இவை பெரும்பாலும்‌ தம்‌ நேரத்தைத்‌ தரையிலே கழித்து விடுகின்றன. யாழ்ப்‌ பறவை கோழி கொக்கரிப்பது போலவும்‌, நாய்‌ குரைப்பது போலவும்‌, பலவகைப்‌ யாழ்ப்‌ பறவைகள்‌ இளவேனிற்‌ காலத்தில்‌ பறவைகளைப்‌ போலவும்‌ குரலெழுப்பி மற்றப்‌ இணைந்து கூடுகின்றன. மயிலுக்கு அழகிய பறவைகளை ஏமாற்றும்‌. காடுகள்‌ வெட்டப்‌ தோகையுண்டு. ஆனால்‌ இனிய குரல்‌ இல்லை. யாழ்ப்‌ பட்டதாலும்‌, நரிக்‌ கூட்டங்களின்‌ தாக்குதலாலும்‌ பறவைக்கு இவை இரண்டுமே உள்ளன. இணைகூடிய குறைந்து வரும்‌ இப்பறவையினைக்‌ காக்க பின்னர்‌ ஆணும்‌ பெண்ணும்‌ சள்ளிகள்‌, வேர்கள்‌, ஆஸ்திரேலிய அரசு சரணாலயங்களை

இலைகள்‌, மற்றப்‌ பறவைகளின்‌ இறகுகள்‌ அமைக்காவிட்டால்‌ அடியோடு அழிந்துவிடும்‌ என ஆகியவற்றைக்‌ கொண்டு தரையிலோ, அடர்ந்த அஞ்சப்படுகிறது.

புதர்களுக்கிடையிலோ கூடு கட்டுகின்றன. பெண்‌

பறவை ஊதா நிறம்‌ மற்றும்‌ பழுப்பு நிறப்‌ புள்ளிகளைக்‌ . கே. சுப்பிரமணியன்‌ கொண்ட ஒரே ஒரு முட்டையை இடுகிறது. முட்டை பொரித்து வெளிவரும்‌ குஞ்சு கருமை நிறத்துடன்‌ மென்மையான சிறகுகளுடன்‌ அழகாகக்‌ காணப்படும்‌. யானை தாய்ப்பறவை இணையற்ற பாசத்துடன்‌ குஞ்சுகளைக்‌ காக்கும்‌.

யானைகள்‌ புரோபாசிடியா என்ற வரிசையில்‌

அடங்குகின்றன. லாக்சோடான்ட்டா என்பவை ஆப்பிரிக்க யானைகள்‌. எலிஃபஸ்‌ என்பவை ஆசியப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ யானைகள்‌. பிளையோசீன்‌ காலப்பிரிவில்‌ வாழ்ந்த பல யானை வழித்‌ தோன்றிய பலதரப்பட்ட சேர்க்கையே மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பொது இன யானைகளின்‌ தோற்றமாகும்‌. நில வாழ்‌ பாலூட்டிகளில்‌ மிகப்‌ பெரியதும்‌ மிகத்‌ தனித்தன்மை வாய்ந்தது யானை.

கூட்டுச்‌

மீசோசோயிக்‌ காலங்களில்‌ வாழ்ந்த டைனோசாரைத்‌ தவிர மற்ற பெருந்தோற்றத்திலும்‌ யானை முன்னோடியாக உள்ளது. அறிவிலும்‌

விலங்குகளைவிட

அளவிலும்‌

புறப்பண்புகளிலும்‌ ஓப்பற்ற

தன்மையுடையவை.

யானை 5

அடிப்படைப்‌ பண்புகள்‌. யானையின்‌ மிகப்‌ பெரிய உடலில்‌ பல எளிமையான, தொன்மையான பண்புகள்‌ காணப்படுகின்றன. இரைப்பை எளிய அமைப்புடையது. கல்லீரல்‌ இரு கதுப்புகளாலானது. இதற்குப்‌ பித்த நீர்ப்பை கிடையாது. எளிய அமைப்புடைய நுரைமீரல்‌ குறைந்த மடலுடையவை. இரு மேற்பெருஞ்சிரைகள்‌ குருதியை இதயத்திற்கு எடுத்துச்‌ செல்கின்றன. இளம்‌ உயிரி, தாய்‌ கருப்பையில்‌ எளிமையான அமைப்புடைய தாய்‌ சேய்‌ இணைத்திசுவினால்‌ குறிப்பாக,

பெருமூளை அரை வட்டங்கள்‌ சிறு மூளைமை

இணைக்கப்பட்டுள்ள மூளை எளிய அமைப்புடைய

மறைக்கும்‌ வண்ணம்‌ அமையவில்லை. இப்பண்பு

மனிதனுக்கும்‌ யானைக்குமுள்ள முக்கிய

வேறுபாடாகும்‌.

சட்டக அமைப்பு. பாதங்களில்‌ 5 விரல்கள்‌ காணப்படுகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்காவில்‌ வாழும்‌ யானைகளில்‌ பின்னங்‌ கால்களின்‌ பக்கங்களில்‌ அமைந்துள்ள விரல்களின்‌ அளவு குறையத்‌ தொடங்கியுள்ளது. முன்னங்காலிலுள்ள விரல்கள்‌ விரலிடைச்‌ சவ்வினால்‌ பிணைக்கப்பட்டுள்ளன, அவற்றின்‌ நுனியில்‌ குளம்பு போன்ற தட்டையான நகங்கள்‌ உள்ளன. நடக்கும்போது உடலின்‌ பளுவைப்‌ பாதங்களின்‌ பின்னால்‌ அமைந்துள்ள தண்டு போன்ற பகுதிகள்‌ தாங்கிக்‌ கொள்கின்றன. மணிக்கட்டு எலும்புகளும்‌, கணுக்கால்‌ எலும்புகளும்‌ ஒரே வரிசையில்‌ அமைந்துள்ளன.

முன்னங்காலின்‌ முழங்கை எலும்பும்‌ பின்னங்காலின்‌ கெண்டைக்கால்‌ வெளி எலும்பும்‌ குறைக்கப்படாமல்‌ முழுமையாக அமைந்தும்‌ உள்ளன. முன்னங்காலின்‌ முழங்கை எலும்பு ஆர எலும்புடன்‌ இணையவில்லை. ஆர எலும்பு முழங்கை எலும்பின்‌ மேல்‌ குறுக்காகச்‌ சென்று கையானது எப்போதும்‌ கவிழ்ந்த நிலையில்‌ இருக்கும்படி பொருத்தப்‌ பட்டுள்ளது. ஆர எலும்பை விட முழங்கை எலும்பு மணிக்கட்டு எலும்புடன்‌ பெரியதாக அமைந்துள்ள நிலை மற்ற விலங்குகளில்‌ சாதாரணமாகக்‌ காணப்படும்‌ நிலை அன்று.

சிறப்புப்‌ பண்புகள்‌. யானையின்‌ பெரிய உடலமைப்பு அனைவருக்கும்‌ தெரிந்த ஒன்று. இந்திய யானைகள்‌ ஆப்பிரிக்க யானைகளைவிட உருவத்தில்‌ மிகவும்‌ சிறியவை. இந்திய யானைகளில்‌ ஆண்‌ யானைகள்‌ ஏறக்குறைய 3 மீ. உயரமும்‌, பெண்‌ யானைகள்‌ 2/, மீ. உயரமும்‌ இருக்கின்றன. ஆப்பிரிக்க யானைகள்‌ சுமார்‌ 3'/, மீ. உயரம்‌ வளர்கின்றன. ஜம்போ எனப்படும்‌ மிக உயரமான ஆப்பிரிக்க யானையின்‌ உயரம்‌ 11 அடி. உடல்‌ எடை 67 டன்கள்‌. காட்டில்‌ வாழும்‌ ஆப்பிரிக்க யானை 13 அடி வளரக்‌ கூடியது. இங்கிலாந்தின்‌ ஊப்னார்‌ பகுதியில்‌ பிளிஸ்டோசீன்‌ காலத்தின்‌ ஆற்றுச்‌ சம பரப்பிலிருந்து 15 அடி உயரமுடைய எலிஃபாஸ்‌ ஆண்டிகுவஸ்‌ புதைபடிவம்‌ தோண்டி எடுக்கப்பட்டது. பாரிஸ்‌ காட்சி சாலையில்‌ 14 அடி உயரமுடைய எலிஃபாஸ்‌ மெரிடியோனாலிஸ்‌ புதை படிவம்‌ உள்ளது.

யானை 7

காலமைப்பு. கால்களில்‌, பாதங்களில்‌ உள்ள எலும்புகளின்‌ எண்ணிக்கை, அமைப்பு ஆகியவை எளிமையாக இருந்தபோதிலும்‌ குளம்புடைய பாலூட்டிகளில்‌ உள்ளதைப்‌ போன்று அமைந்திருக்க வில்லை. எலும்புகள்‌ செங்குத்தாக ஒன்றன்‌ மேல்‌ ஒன்றாக அமைந்துள்ளன. குதிரையின்‌ தொடைப்‌ பகுதி முழங்கால்‌ பகுதியில்‌ நிரந்தரமாக வளைந்துள்ளது; ஆனால்‌, யானையில்‌ நீளவாட்டில்‌ அமைந்துள்ளது. குதிரையில்‌ நீள்‌ “5 வடிவத்துடனும்‌ அசையக்கூடியப்‌ பகுதிகள்‌ அச்சுக்கு இணையாக அமைந்துள்ளன: யானையில்‌ “1” வடிவத்துடனும்‌, அசையக்கூடிய பகுதிகள்‌ எலும்பின்‌ அச்சுக்கு வலக்கோணத்திலும்‌ அமைந்துள்ளன. இவ்வாறு இந்த எலும்பு தட்டையாக அமைந்தபோதிலும்‌ இந்த எலும்பின்‌ மீது விழும்‌ அழுத்தத்தை இதன்‌ நீளம்‌ முழுவதும்‌, தாங்குவதால்‌ இதன்‌ வலிமை குறைவதில்லை.

குறுகிய கழுத்து பொதுவாக நீண்ட கால்களுடைய விலங்கினங்களில்‌ நிலப்பரப்பை அடைவதற்காக நீண்ட கழுத்து அமைந்திருக்கும்‌. (குதிரை, ஒட்டகச்சிவிங்கி) யானைகளில்‌ துதிக்கை பற்றிப்‌ ஆற்றல்‌ வாய்ந்ததாகவும்‌, நன்றாக அசையக்கூடியதாகவும்‌, நாலர்புறமும்‌ சுழலக்கூடிய தன்மையுடையதாகவும்‌

பிடிக்கும்‌ தன்மையுடனும்‌

உள்ளது. துதிக்கை நன்றாகச்‌ சுழலக்கூடியதாக ஒட்டகச்‌ சிவிங்கியின்‌ கழுத்தினால்‌ ஏற்படக்கூடிய பயனைவிட அதிகப்படியான பயனைத்‌ தருவதால்‌,

கழுத்து மிகச்‌ சிறியதாகக்‌ காணப்படுகிறது.

மேல்‌ உதடும்‌, மூக்கும்‌ மிகவும்‌ நீட்டப்பட்டு, தசைகளாலான துதிக்கையாக அமைந்துள்ளது. நுனியில்‌ புற நாசித்துளைகள்‌ உள்ளன. துதிக்கை உணவுப்‌ பொருளைப்‌ பற்றி எடுப்பதற்கும்‌, அவற்றைச்‌ சேர்த்து எடுத்து வாயினுள்‌ செலுத்துவதற்கும்‌, மரங்களை வேருடன்‌ அசைத்துப்‌ பிடுங்கி எடுப்பதற்கும்‌ பயன்படுகின்றது.

| மண்டை ஓட்டின்‌ அமைப்பு. மண்டை ஓடு உருவத்தில்‌ மிகவும்‌ பெரியதாக அமைந்துள்ளதால்‌ பல தனிச்‌ சிறப்பியல்புகளைக்‌ கொண்டது. மண்டை ஓட்டினுள்‌ காற்றறைகள்‌ இருப்பதால்‌ மண்டை ஓட்டு

\

எலும்புகள்‌ மிகவும்‌ கடினமாக அமைந்துள்ளன.

மண்டை ஓடு ஒரு நெம்புகோல்‌ போன்று அமைந்துள்ளது. பிடர்‌ முண்டுகள்‌ மூளையாகவும்‌, நீள்‌ அச்சு, அதன்‌ எடைக்‌ கையாகவும்‌, நீள்‌ அச்சிற்கு வலது கோணத்திலுள்ள பிடர்‌ வாட்டம்‌ ஆற்றல்‌ கையாகவும்‌ செயல்படுகின்றன. நீள்‌ அச்சின்‌ நீளம்‌ குறைந்திருப்பது எடைக்‌ கையைக்‌ குறைக்கிறது. மண்டை ஓட்டின்‌ உயரம்‌ பிடர்‌ முண்டின்‌ பகுதியில்‌ அத்துப்‌ 2 ஆற்றல்‌ கையை நீளமாக்குகிறது.

இது நெம்புகோல்‌ திறனை அதிகரிக்கிறது. மேலும்‌ தலையின்‌ எடையைத்‌ தாங்கும்‌ முள்ளெலும்பு

முள்களையும்‌ மண்டை ஓட்டையும்‌ இணைத்து

அமைந்திருக்கும்‌. சுருங்கி விரியும்‌ பந்தகத்தின்‌ இணைப்பிற்குரிய பரப்பை அதிகப்படுத்துகிறது. இவ்வகை மாற்றத்தினால்‌ இதன்‌ வலிமை

அதிகரிக்கிறது. இவ்வகை எலும்பமைப்பிற்கு டிப்ளோ என்பது பெயர்‌. இவ்வமைப்பு மனிதனிலும்‌ பிற விலங்குகளிலும்‌ காணப்பட்ட போதிலும்‌ இந்த அளவில்‌ இல்லை. மண்டை ஓட்டின்‌ பெருகிய அளவிற்கு மூளையின்‌ பெருக்கம்‌ காரணமல்ல. புற, உள்‌ மண்டை ஓட்டுக்‌ கூடுகளின்‌ இடையில்‌ அமைந்துள்ள மெல்லிய தகட்டு எலும்புகளினால்‌ பிரிக்கப்பட்ட ஒழுங்கற்ற காற்றிடைச்‌ செல்களே முக்கிய காரணமாகும்‌.

பற்களமைப்பு. இரண்டு வெட்டும்‌ பற்களே உள்ளன. இப்பற்களிரண்டும்‌ மிகவும்‌ நீளமாக வளர்ந்து தந்தங்களாக அமைந்துள்ளன. வேர்‌ இல்லாததால்‌ வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவை கெட்டியாக்கப்பட்ட பற்காழி அல்லது தந்தம்‌ என்ற பொருளால்‌ ஆனவை. வெட்டும்‌ பற்களாகிய தந்தங்கள்‌ எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்‌ கொள்வதற்குப்‌ பயனுள்ளதாக அமைந்துள்ளன. தந்தங்கள்‌ பெண்‌ யானைகளில்‌ மிகவும்‌ சிறியதாக அமைந்துள்ளன.

தங்களைப்‌

மேல்‌ தாடையிலும்‌, கீழ்த்‌ தாடையிலும்‌ ஒவ்வொரு பக்கமும்‌ மூன்று, மூன்று கடைவாய்ப்‌ பற்கள்‌ தோன்றுகின்றன. தாடைகள்‌ சிறியனவாக இருப்பதால்‌ தாடையில்‌ ஒரு சமயத்தில்‌ ஒன்று அல்லது இரண்டு

கடைவாய்ப்‌ பற்களே உள்ளன. முதல்‌ கடைவாய்ப்‌ பல்‌

யானை 9

தேய்ந்து விழுந்தவுடன்‌ அதற்குப்‌ பின்னால்‌ உள்ள கடைவாய்ப்‌ பல்‌ முன்னால்‌ தள்ளப்பட்டு விழுந்த பல்லின்‌ இடத்தை வந்து அடைகிறது. எண்ணிக்கையில்‌ மூன்றாக இருப்பினும்‌ எப்போதும்‌ பக்கத்திற்கு இரண்டு இரண்டு கடைவாய்ப்‌ பற்களே ஒரு சமயத்தில்‌ பயன்படுகின்றன.

ஒவ்வொரு கடைவாய்ப்‌ பல்லும்‌ பல குறுக்காய்‌ அமைந்த, விரிவாக அமையப்‌ பெற்ற பற்காழிகளினாலும்‌, பற்சிப்பிகளினாலும்‌ ஆன தகடுகளால்‌ ஆனது. இப்பல்‌ ஒவ்வொன்றிற்கும்‌ தனித்தனியான பற்கூழ்ப்‌ பாகம்‌ உள்ளது. பற்கூழ்ப்பாகம்‌ பற்காரையுடன்‌ இணைந்துள்ளது.

ஒவ்வொரு பற்கூழின்‌ பாகமும்‌ பற்காரையுடன்‌ இணைந்து பல குறுக்காய்‌ அமைந்த சாய்‌ சதுர வடிவமுடைய பற்காழிகளாலான தாள்‌ பலமானது. பற்சிப்பியால்‌ மூடப்பெற்று, தாள்‌ படலங்களுக்கிடையில்‌ பற்காரையும்‌ அமைந்து, பல்லின்‌ அடிப்பகுதி வரை நீண்டுள்ளது. அவ்வாறு அமையப்பெற்ற பல்லானது உணவுப்‌ பொருளை அரைப்பதற்கான விரிவான பரப்பை அளிக்கிறது. ஆசிய யானைகளில்‌ 24 தாள்‌ படலங்களும்‌, ஆப்பிரிக்க யானைகளில்‌ 10 அல்லது 11 தாள்‌ படலங்களும்‌ உள்ளன.

மூளை. பெருமூளை அரை வட்டப்‌ பகுதிகள்‌

பெரியனவாகவும்‌, ஒன்றாகச்‌ சுருள்களுடன்‌ இருப்பினும்‌ சிறுமூளைப்‌ பகுதிகளை மூடி மறைப்பதில்லை. ரையா (13/8) எனப்படும்‌ இந்திய ஆண்‌ யானையின்‌ மூளை எடை 10°/, பவுண்ட்‌ ஆகும்‌. மனிதனின்‌ மூளையைவிட அளவில்‌ பெரியவை. திமிங்கலத்தின்‌ மூளையை விடச்‌ சிறியவை.

கூடியனவாகவும்‌

இரைப்பை சாதாரணமாகவே அமைந்துள்ளது. தாவரவுண்ணி வரிசையைச்‌ சார்ந்த விலங்குகளாகையால்‌ குடல்‌ நீளமாக உள்ளது. பெருங்குடல்‌ சிறுகுடலின்‌ நீளத்தில்‌ அரைப்‌ பகுதி நீளமுள்ளது.

சுரப்பிகள்‌ வயிற்றறையில்‌

விந்துச்‌

அமைந்துள்ளன. ஓர்‌ இணை பால்சுரப்பிக்‌ காம்புகள்‌

10 யானை

AK ~

யானைகள்‌

மார்புப்‌ பகுதியில்‌ உள்ளன.

அறிவுக்கூர்மை. யானைகள்‌ தனக்கு ஏற்பட்ட காயம்‌, துன்பம்‌, நண்பன்‌, பகைவன்‌, தனக்கு விருப்பமான பழங்கள்‌ கிடைக்குமிடம்‌, சுமத்தல்‌, அடுக்கி வைத்தல்‌ போன்ற செயல்களை ஒரு முறை பழக்கியபின்‌ தாமாகவே செய்கின்றன. முக்கியமாக இந்திய யானைகள்‌ அமைதியான, கீழ்படியக்கூடிய வகையைச்‌ சார்ந்தவை. ஆண்‌ யானைகள்‌ சில நேரங்களில்‌, முக்கியமாக இனப்பெருக்கக்‌ காலங்களில்‌ ஏதோ நரம்புத்‌ தூண்டுதலினால்‌ தன்னைப்‌

வகையில்‌ பாதிக்கப்பட்ட மதங்கொண்டு பாதுகாக்கக்கூடிய பாகனையே தாக்கும்‌.

அண்மைக்கால ஆய்வின்படி சில யானை இனங்கள்‌ குட்டிகளைப்‌ பேணுவதில்‌ மிக அதிகமான ஆர்வத்தைக்‌ காட்டுகின்றன. ஒரு பெண்‌ யானை இறந்து அதன்‌ குட்டி தனித்து இருக்குமேயானால்‌, தாய்மைப்‌ பண்புடைய மற்ற யானை தன்‌ குட்டியைப்‌ போல அதற்குப்‌ பாலூட்டிப்‌ பேணுகிறது. இந்தப்‌ பண்பு மரபு வழியாக அவ்வினங்களில்‌ மட்டும்‌ தொடர்ந்து வருவதாக தெரிகிறது.

புரோடாசிடியா வரிசையைச்சார்ந்த விலங்குகள்‌ பிற பாலூட்டிகளுடன்‌ எவ்விதமான இனவுறவுத்‌ தொடர்புகளும்‌ காட்டாமல்‌, தங்களுக்கே உரித்தான தனிச்‌ சிறப்பியல்புகளுடன்‌ தனித்து நிற்கும்‌ பிரிவாக

அமைந்துள்ளன. இரா. சகுந்தலா

துணைநூல்‌. Richard Swann Lall, Organic Evolution, Light & Life Publishers, New Delhi, 1957.

யானைக்‌ குறுந்தொட்டி

இதனைக்‌ காட்டுக்குறுந்தொட்டி என்றும்‌ கூறுவர்‌. சிடாராம்பிஃபோலியா இதன்‌ தாவரப்பெயர்‌ ஆகும்‌. இது மால்வேசி குடும்பத்தைச்‌ சோந்தது. இது இந்தியா, நேபாளம்‌ மற்றும்‌ தமிழகம்‌ முழுவதும்‌ காணப்படும்‌. இதனை 1800 மீ. உயரம்‌ வரை காணலாம்‌.

யானைக்குறுந்தொட்டி 11

வளரியல்பு. இது நேராக 0. 75 - 15 மீ. உயரம்‌ வளரும்‌ செடி. இலைகள்‌ பற்களுடையவை. இலையின்‌ அளவு 1.5-4, 0.5-3.5 செ.மீ. இலைக்காம்பின்‌ நீளம்‌ 2-5 மி.மீ. இலையடிச்‌ செதில்கள்‌ நீளமானவை. மஞ்சரி சைமோஸ்‌ வகையைச்‌ சார்ந்தது. மஞ்சரித்‌ தண்டு மையத்தில்‌

அமைந்திருக்கும்‌.

மலர்கள்‌ மஞ்சள்‌ அல்லது வெள்ளை நிறம்‌ உடையன. இலைக்‌ கக்கங்களில்‌ மலர்‌ தனியாகவோ இரட்டையாகவோ 2 செ.மீ குறுக்களவில்‌ உண்டாயிருக்கும்‌. தனியாகவோ 5-7 பூக்களுடனோ இருக்கும்‌. பூக்காம்பின்‌ நீளம்‌ 3-5 மி.மீ. பூவடிச்செதில்கள்‌, புல்லிதழ்கள்‌ ஐந்தும்‌ அடிப்பக்கம்‌ இணைந்திருக்கும்‌; அல்லிதழ்கள்‌ ஐந்தும்‌ சிறியவை. மகரந்தக்குழல்‌ பல கூறாகப்‌ பிரிந்து உச்சியில்‌ மகரந்தத்தாள்களைக்‌ கொண்டிருக்கும்‌.

உருண்டையான குல்பை 5-12 அறைகளைக்‌ கொண்டது. சூல்கள்‌ அறைக்கு ஒன்றாக ஊசிபோல்‌ காணப்படும்‌. எண்ணிக்கைக்கேற்ப இருக்கும்‌. கனி அமுக்கிய வடிவமுடையது. இது புல்லி குலிலைகள்‌

சூலகத்தண்டுகள்‌ சூலிலைகளின்‌

உருண்டை வட்டத்தினுள்‌ அடங்கியிருக்கும்‌. அச்சிலிருந்தும்‌ மற்றச்‌ குலிலைகளிலிருந்தும்‌ பிரிந்திருக்கும்‌. . விதைகள்‌ வழவழப்பாகவும்‌ சொரசொரப்பாகவும்‌ முட்டை வடிவில்‌ இருக்கும்‌.

பயன்‌. இதன்‌ வேரும்‌ இலைகளும்‌ சிறுநீர்‌, இதயம்‌ சார்ந்த நோய்கள்‌, மூலம்‌, வீக்கங்களுக்கு உதவுகின்றன. வேர்‌, வாத நோய்க்குச்‌ சிறந்த மருந்தாகும்‌. வயிற்றோட்டத்திற்கும்‌ பயன்தரும்‌.

உலர்ந்த இலையைப்‌ பொடித்துத்‌ தூளைக்‌ காயங்கள்‌ மீது தூவலாம்‌. மடகாஸ்கர்‌ நாட்டில்‌ இதன்‌ வேர்ச்சாற்றை. வயிற்றுக்‌ கடுப்பிற்குத்‌ தருவதுண்டு. இதன்‌ இலைகளில்‌ எஃபெட்ரின்‌ என்னும்‌ பொருள்‌ உள்ளது. வேரில்‌ உள்ள அல்கலாய்டில்‌ நோயை சிறுநீரைப்‌ பெருக்கவும்‌, காய்ச்சலைப்‌ போக்கவும்‌ தண்டு

உதவுகிறது.

நலமாக்கும்‌ .தன்மை உள்ளது.

கோ. அர்ச்சுணன்‌

12 யானைக்‌ குன்றிமணி

யானைக்‌ குன்றி மணி

இதற்குப்‌ பெரிய குன்றிமணி, ஆனைக்‌ குன்றிமணி, மஞ்சாடிமரம்‌ என்னும்‌ பெயர்களும்‌ உண்டு. இதன்‌ ஆங்கிலப்‌ பெயர்கள்‌ பிட்‌ மரம்‌, ரெட்‌ வுட்‌, கோரல்‌ வுட்ரீ என்பனவாகும்‌. அடி னேந்திரா பவோனியா என்னும்‌ பேரினப்பெயர்‌ மகரந்தத்‌ தண்டிலுள்ள சுரப்பினைக்‌ குறிக்கிறது. லத்தீன்‌ மொழியில்‌ பவோனியா என்றால்‌ மயிலிறகைப்‌ போன்றது (இலையமைப்பு) என்பதைக்‌ குறிக்கும்‌. பவள நிற விதைகளைக்‌ கொண்டிருப்பதால்‌ இம்மரத்திற்குப்‌ பவள மரம்‌ (coral tree) என்னும்‌ பெயர்‌ ்‌ வந்தது. ஈரப்‌ பசையுள்ள இடங்களில்‌ இம்மரம்‌ நன்கு

வளர்கிறது. இந்தியாவில்‌ மேற்குத்‌ தொடர்ச்சி மலைப்‌

யானைக்‌ குறுந்தொட்டியும்‌ அதன்‌ பாகங்களும்‌

பகுதியிலும்‌ அந்தமான்‌ பகுதியிலும்‌ மிகுந்து காணப்படுகிறது. மியான்மர் நாட்டிலும்‌ இம்மரத்தைக்‌ காணலாம்‌.

வளரியல்பு. இம்மரம்‌ இலையுதிர்‌ வகையைச்‌ சேர்ந்தது. இம்மரம்‌ 18 - 24 மீ. உயரம்‌ வளரும்‌. இம்மரத்தின்‌ சுற்றளவு 2.0 முதல்‌ 2.5 மீட்டர்‌ இருக்கும்‌. உயரமான கிளைகள்‌ விரிந்து 10 மீ. குறுக்களவிற்குப்‌ படர்ந்து வளர்ந்திருக்கும்‌. இதன்‌ பட்டை, சாம்பல்‌ நிறமானது. இலைகள்‌ சிறகு கூட்டிலை அமைப்பைக்‌ கொண்டவை, 15-30 செ.மீ அளவானவை,; முட்டை

வடிவான இவற்றின்‌ முனை மழுங்கியிருக்கும்‌;

மஞ்சரி 15-20 செறி நீளமானது. இலைக்‌

யானைக்‌ குன்றிமணி 13

ட்ட XY No

ய்‌

SS

ess END 1

SS SS

a SIAN PORTS

21. epee

யானைக்‌ குன்றிமணியும்‌ அதன்‌ பாகங்களும்‌

14 யானைச்‌ சீரகம்‌

கக்கங்களிலும்‌, சிறு கிளைகளின்‌ நுனியிலும்‌ இலைகள்‌ தோன்றுகின்றன. நெற்றுகள்‌ 15-20 செ. மீ. நீளத்திலும்‌, 0.7-1 செ.மீ. அகலத்திலும்‌ தட்டையாக இருக்கும்‌. முதிர்ந்த நெற்றுகள்‌ கறுப்பாகி நீளவாக்கில்‌ வளைந்து, சுருண்டு வெடிக்கின்றன. விதைகளை வெளிப்படுத்திய பின்பும்‌ சுருண்ட நெற்றுகள்‌ நீண்ட்‌ நாள்களுக்கு மரத்திலேயே நிலைத்திருக்கும்‌.

விதைகள்‌ பவழச்சிவப்பு நிறமானவை. சாதாரணக்‌ குன்றிமணியைவிட விதைகள்‌ பெரியவை. யானைக்‌ குன்றிமணியில்‌ கறுப்புப்‌ புள்ளி இராது. விதை முழுவதும்‌ சிவப்பு நிறமாயிருக்கும்‌. 1 கி.கி. எடையில்‌ 8000 விதைகள்‌ காணப்படும்‌.

வளர்ப்பு முறை. இது செம்மண்‌ நிலப்‌ பகுதிகளில்‌ நன்கு வளரும்‌. ஆண்டிற்கு சராசரியாக 800 மி.மீமழை பொழியும்‌ இடங்களில்‌ மிகுந்து காணப்படுகிறது. விரைவாக வளரும்‌ மரங்களுள்‌ இதுவும்‌ ஒன்று. விதைகளைப்‌ போத்துகள்‌ மூலமாக இனப்பெருக்கம்‌ செய்யலாம்‌. இரண்டு நாள்கள்‌ விதைகளை ஊறவைத்து விதைத்து நாற்றுவிட்டுக்‌ கன்றுகளைப்‌ பெற்று நடலாம்‌. நேரடியாக விதைகளை விதைத்தும்‌ வளர்க்கலாம்‌. இதற்குத்‌ தழைச்சத்து, மணிச்சத்து உரமிட நன்கு வளரும்‌. பயனுள்ள மரம்‌ கிடைக்க 25-30 ஆண்டுகள்‌ ஆகும்‌

பயன்‌. இம்மரத்தின்‌ விதைகளிலிருந்து எண்ணெய்‌ எடுக்கலாம்‌. . விதை எண்ணெயில்‌ லிக்னோசெரிக்‌ அமிலம்‌ உள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடினமான மரம்‌. 1 க.மீ. மரத்தின்‌ எடை 900 இம்மரத்தின்‌

வைரக்கட்டை சிவப்பாக இருக்கும்‌.

கி.கிராமாகும்‌. உள்பகுதியான பொதுவாக யானைக்‌ குன்றிமணி மரத்தைச்‌ செஞ்சந்தனக்‌ கட்டைக்கு மாற்றாகப்‌ பயன்படுத்தலாம்‌. தென்னிந்தியாவில்‌ இம்மரத்தை, மேஜை, நாற்காலி, பெட்டி செய்யவும்‌ கட்டடப்‌ பணிக்காகவும்‌ பயன்படுத்துவதுண்டு. விறகாகவும்‌ எரிபொருளாகவும்‌ பயன்படுத்தலாம்‌.

இம்மரத்தின்‌ இலை, வேர்‌, விதை முதலியவை மருந்தாகின்றன. இலையிலிருந்து சாறு தயாரித்து நாள்பட்ட வலி, கீல்பிடிப்பு ஆகியவற்றிற்குத்‌ தரலாம்‌. . மேலும்‌ வயிற்று மந்தம்‌, ஆண்குறியின்‌ குருதி ஒழுக்கு ஆகியனவும்‌ குணமாகும்‌. இம்மரத்திலிருந்து

விதைகளைச்‌ சேகரித்துப்‌ பொடித்துத்‌ தேனைக்‌ கலந்து கொப்புளங்களின்‌ மீது பூசி வரச்‌ சீழ்ப்‌

பிடிப்பதில்லை. இதனையே கட்டிகளின்‌ மீது தடவிவர

அவை விரைவில்‌ கரைந்து குணமாகும்‌. விதைகள்‌ நச்சுத்தன்மை கொண்டவை. எனவே, வீதைகளை உண்ணவோ உள்ளுக்குத்‌ தரும்‌ மருந்துகளில்‌ சேர்க்கனேோ கூடாது. மரத்தைத்‌ தூள்‌ செய்து நீரில்‌ கலந்து நெற்றியில்‌ பற்றிடுவதால்‌ பணிச்சுமையால்‌ உண்டாகும்‌ தலைவலி நீங்கும்‌. மலைத்‌ தோட்டப்‌ பயிர்களுக்கு இதனை